நேர்காணலில் தேர்தல் ஆணையாளர் ரவிச்சந்திரன் மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், வடக்குஒன்றியதிமுக பொறுப்பாளர் எல்.எம் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திமுக நிர்வாகிகள் கட்சியில் உழைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் புதிதாக வந்தவர்களுக்கு வாய்ப்பு தரக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர் இதனால் ஆத்திரமடைந்த வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத்தமிழ்செல்வன் சத்தம் போடுவதாக இருந்தால் வெளியில் போய் சத்தம் போடுங்கள் இங்கே கூச்சல் குழப்பம் பண்ண வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆவேசப்பட்ட திமுக உடன்பிறப்புகள் சேர்களை தூக்கி வீசி கூட்டத்தில்வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்குவாதங்கள் அடிதடி வரை செல்லும் நிலை ஏற்பட்டது சுதாரித்துக் கொண்ட திமுக நிர்வாகிகள் உடனடியாக அரங்கை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டனர்.
No comments:
Post a Comment