தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பெரியகுளத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி இந்த அருவியானது வனத்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது கடந்த ஒரு சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் வட்ட கானல் மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ள வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளார்.
இதனால் பெரியகுளம் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு அதிக அளவில் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
- பெரியகுளம் செய்தியாளர் அ. பால் ஸ்டார் கிங்ஸ்லி.
No comments:
Post a Comment