அ.இ.அ.தி.மு.க நான்காம் கட்ட அமைப்புத் தேர்தல் மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தல் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று 25.04.2022 தேனியில் தனியார் மண்டபத்தில் மாவட்ட கழக தேர்தல் பொறுப்பாளர்கள் திருமதி. V.M.இராஜலட்சுமி கழக மகளிர்அணி துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் அவர்கள் மற்றும் திரு. C.கிருஷ்ணமுரளி MLA., தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அவர்கள் தலைமையில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இதில் தற்போதைய மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான், முன்னாள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன், பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, கம்பம் நகர செயலாளர் என்.எஸ்.கே.கே.ஆர். அருண்குமார், போடி சேதுராமன் மற்றும் பல கழக நிர்வாகிகள் விண்ணப்பம் அளித்தனர்.
இந்நிகழ்வில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப. ரவீந்திரநாத் குமார் மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் இரா. பார்த்திபன் மற்றும் ஒன்றிய நகர கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பெரியகுளம் செய்தியாளர் அ. பால் ஸ்டர்ர் கிங்ஸ்லி.
No comments:
Post a Comment