தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழாவிற்கு இரவு மற்றும் பகல் தொடர்ந்து 7 நாட்களுக்கு 142 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது பற்றிய செய்தி வருமாறு:-
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா மே.10ல் துவங்கி மே.17ல் முடிகிறது. தினமும் கோவிலுக்கு வரும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்ல கூடிய நிலை உள்ளது. கடந்த 2 வருட காலம் வீரபாண்டி திருவிழா நடைபெறாததால்,அந்த நாட்களில் நேர்த்திக் கடன் செலுத்தாதவர்கள் இந்த வருடம் கோவில் வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவர். வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
120 பஸ்களுடன், 22 ஸ்பேர் பஸ்கள் என 142 பஸ்கள் முதற்கட்டமாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது தவிர சிறப்பு பஸ்களை மதுரை,திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் திருச்சி,திருநெல்வேலி உட்பட வெளி மாவட்டங்களுக்கு பஸ் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி. பிரவீன் உமேஷ்டோங்கரே ஆய்வுக்கு பின் கூறியிருப்பதாவது.
தேனியில் இருந்து உத்தமபாளையம் வழியாக செல்லும் பஸ் வாகனங்கள் அனைத்தும் உப்புக்கோட்டை விலக்கு முன் திருப்பப்பட்டு மாற்று வழியாக குச்சனூர், மார்க்கையன்கோட்டை, சின்னமனூர், உத்தமபாளையம் சென்றடையலாம். அதே போல் சின்னமனூரில் இருந்து தேனி வந்து வெளியூர்களுக்கு செல்லும் வாகனங்கள் உப்பார்பட்டி விலக்கு முன் திருப்பப்பட்டு மாற்று வழியாக தாடிச்சேரி,கொடுவிலார்பட்டி, அரண்மனை புதூர் வழியாக தேனி சென்றடையும், போக்குவரத்து மாற்றம் மே.10ல் காலை 6.00 மணி முதல் மே. 17ல் நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment