தேனி அருகே பழனிசெட்டிபட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு கோடைகாலம் என்பதால் கோடை வெப்பத்தை தணிக்கவும் வீரபாண்டி சித்திரைத் திருவிழாவை முன்னிட்டும், அதிமுக கழக உத்தரவின்படி அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு அண்ணா தொழிற்சங்க தலைவர் இளங்கோவன் தலைமை வகிக்க செயலாளர் ஆசைத்தம்பி தெற்கு மண்டல செயலாளர் சீனிவாசன் பொருளாளர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகிக்க கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் நீர்மோர் சர்பத் ரோஸ்மில்க் உள்ளிட்ட நீராகாரங்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். சங்கக் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment