வடபுதுப்பட்டி தனியார் கல்வியியல் கல்லூரியின் 17வது ஆண்டு விழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 May 2022

வடபுதுப்பட்டி தனியார் கல்வியியல் கல்லூரியின் 17வது ஆண்டு விழா.

தேனி அருகே வடபுதுப்பட்டி யில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியின் 17வது ஆண்டு விழா உறவின்முறை தலைவர் முருகன் தலைமை வகிக்க பொதுச்செயலாளர் ராஜமோகன் பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகிக்க கல்லூரி செயலாளர் தில்லைக்கனி வரவேற்புரை  ஆற்ற, கல்லூரி முதல்வர் பியூலா ராஜினி வாழ்த்துரை வழங்கி கல்லூரியில் சிறப்புகள் செயல்பாடுகள் சாதனைகள் மற்றும் ஆண்டறிக்கையினை வழங்கினார்.


இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் பாக் ஜலசந்தி தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தை 19 மணி 45 நிமிட நேரத்தில் நீந்தி சரித்திர சாதனை படைத்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சாதனையாளர் சினேகன் - க்கு உறவின்முறை சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து கடந்த கல்வியாண்டில் கல்லூரி அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கல்வியியல் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


நுண்கலைகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது ஆண்டு விழா நிறைவாக கல்லூரி இணைச் செயலாளர் கனகராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad