அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் கடனை திரும்ப செலுத்த கூறும் தனியார் தொண்டு நிறுவனம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 7 May 2022

அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் கடனை திரும்ப செலுத்த கூறும் தனியார் தொண்டு நிறுவனம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பாப்பம்மாள்புரம் காந்திநகரில்  கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வைகை ட்ரஸ்ட் என்ற தனியார் தொண்டு  நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன . ஒவ்வொரு மகளிர் சுய உதவி குழுவிலும் 10 முதல் 20 வரையிலான பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இக்குழுக்கள் வங்கிகள் மூலம் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான தொகையை  தொண்டு நிறுவனங்கள் மேற்பார்வையில் கடன் பெற்று  தவணைமுறையில் செலுத்தி வருவது வழக்கம் . கடைசியாக இந்த மகளிர் குழுக்களுக்கு கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் கடன் வழங்கப்பட்டது.  இந்நிலையில் கடன்களை பெற்ற மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் அதற்குரிய தவணைகளை செலுத்தி வந்தனர்.


இந்நிலையில் கடந்த கொரேனோ தொற்று  காலங்களில் இரண்டு மாதங்கள் தவணைகள் அபராதம் இல்லாமல் தாமதமாக  செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது .  இதையடுத்து அந்த காலங்களில் இரண்டு  தவணைகள் செலுத்தப்படவில்லை . அதன்பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் திமுக தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது . அதேபோன்று ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் குழுக்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால்  தற்போது வரை தங்களது கடன்  ரத்து செய்யப்படவில்லை என்றும் ,  கடனை கட்ட கோரி தொந்தரவு செய்வதாகவும்  மகளிர் குழுக்களை ஒருங்கிணைத்து நடத்தும் ஆண்டிபட்டி வைகை  டிரஸ்ட் நிறுவனர் சின்னாண்டி என்பவரும் அவரது பணியாளர்களும் தங்களது வீடுகளுக்கு காலையிலேயே வந்து அமர்ந்து அநாகரீகமாகப் பேசி கடன்களை கட்டச்சொல்லி தொந்தரவு செய்வதாகவும்,  மகளிர் குழு  பெண்கள் சார்பில் புகார் கூறப்பட்டுள்ளது.


மகளிர்களுக்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் அதற்கு மாறாக தங்களிடம் கடன் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் , தொண்டு நிறுவன  களப்பணியாளர்கள் மூலம் தொலைபேசி மூலமாகவும் அநாகரிகமாக பேசி தங்களை மனவேதனைப்  படுத்துவதாகவும் கூறும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தங்களது கடமைகளை முழுமையாக ரத்து செய்து அதற்கான ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் தங்களை தொந்தரவு செய்யும் தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad