தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விதை உற்பத்தி செய்யப்படும் முறையையும் மற்றும் இங்கு நடைபெறும் ஆராய்ச்சிகளையும் கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் புதிய 75 குதிரைத்திறன் கொண்ட நீர்மூழ்கி மோட்டாரை இயக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். விதை மைய இயக்குனர் முனைவர் சுந்தரேசன் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி முனைவர் ராஜவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment