29வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 May 2022

29வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், மரிக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட சுப்புலாபுரம், எரதிமக்காள்பட்டி, ஜி.உசிலம்பட்டி, கொத்தப்பட்டி மற்றும் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் பொதுசுகாதாரத்துறையின் மூலம் 29 வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது : தமிழகம் முழுவதும் 29வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. நடைபெறக்கூடிய மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினையொட்டி பொதுசுகாதாரத்துறையுடன் பிற துறைகளும் ஒருங்கிணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 


இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தால் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி குறைவாக செலுத்தியுள்ள பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை கணக்கெடுத்து அந்தப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அந்தந்த பகுதிகளில் வீடு வீடாகச்சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களைக் கண்டறிந்து அவர்களை அருகில் நடைபெறும் முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்திடும் வகையில் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.  தமிழக அரசின் உத்தரவின்படி, தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப்பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத விடுபட்ட நபர்கள்  தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில்  29-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


அதன்படி, ஆண்டிபட்டி வட்டாரத்தில் 105 இடங்களிலும், போடிநாயக்கனூர் வட்டாரத்தில் 110 இடங்களிலும், சின்னமனூர் வட்டாரத்தில் 60 இடங்களிலும், கம்பம் வட்டாரத்தில் 89 இடங்களிலும், க.மயிலாடும்பாறை வட்டாரத்தில் 60 இடங்களிலும், பெரியகுளம் வட்டாரத்தில் 136 இடங்களிலும், தேனி வட்டாரத்தில் 84 இடங்களிலும், உத்தமபாளையம் வட்டாரத்தில் 51 இடங்களிலும் என மொத்தம் மாவட்டத்தில் 695 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 1,15,280 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 38,670 கோவாக்சின் தடுப்பூசிகளும் 14,460 காபேவேக்ஸ் தடுப்பூசிகளும் என மொத்தம் 1,68,410 தடுப்பூசிகள் செலுத்திட திட்டமிடப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது.


கொரோனா தடுப்பூசி முகாம்களின் மூலம் பொதுமக்கள் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு, தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் பாதுகாத்திட வேண்டும் எனவும், கொரோனா நோய்த் தொற்றினை கருத்தில் கொண்டு பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில், தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்   க.வீ.முரளீதரன் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad