இன்று மே 8 உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மாவட்ட செயலாளர் சுருளிவேல் தலைமையில், நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
இந்த நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பால்சுதர் பொதுமக்களுக்கு வழங்குகின்ற நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாக குழு உறுப்பினர்கள் காமராஜ் மணி ஐயப்பன் முருகேசன் சீனி பாண்டியன் ஏழுமலையான் சரவணன் ராதா வெளிச்சம் அறக்கட்டளை சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment