இந்த ஆய்வின் போது, நியாய விலைக்கடைகளில் விற்பனை முனைய இயந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, பொருட்கள் வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள், முதல் தவணை வரப்பெற்ற பொருட்களின் விபரம் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நியாய விலைக்கடைக்கு வரப்பெறும் அரிசியில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தெரிவித்து, அரிசியினை உடனடியாக மாற்றி இறக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள விற்பனையாளரை அறிவுறுத்தினார். மேலும், நியாய விலைக்கடைகளுக்கு வருகை தந்த குடும்ப அட்டைதாரர்களிடம் அரிசியின் தரம் மற்றும் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் விபரங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு, படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகை தருகின்ற பொதுமக்களுக்கு மருத்துவர்கள் கனிவுடன், பொறுமையாக நோயின் தன்மை குறித்து எடுத்துக்கூறி, முறையான சிகிச்சை அளித்திடவும், மருத்துவமனையின் சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடவும், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் வசதி போன்றவற்றை முறையாக பராமரித்திட மருத்துவ அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீ தரன் அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment