தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி, அருவியில் தற்பொழுது நீர்வரத்து சீராக உள்ளதால் வெளி மாவட்ட, வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று மதுரையை சேர்ந்த செந்தில்குமார்எனது குடும்பத்தினருடன் கும்பக்கரை அருவிக்கு சென்று உள்ளார். அருவியில் குளிக்க செல்லும் பொழுது அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் தொலைந்து விட்டது. இது சம்பந்தமாக வனச்சரகர் டேவிட்ராஜ் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் தனது குழுவினருடன் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.
தேடுதலுக்குப் பிறகு2 பவுன் தங்கச்சங்கிலியை கண்டறிந்து உரிமை செந்தில்குமாரிடம் ஒப்படைத்தார்.தொலைந்து போன தங்க செயினை மீட்டுத் தந்த வனச்சரகர் டேவிட்ராஜன் மற்றும் வனத் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment