மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே தேனி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் பட்டப்பகலில் துணிகர அரிவாள் வெட்டு - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 May 2022

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே தேனி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் பட்டப்பகலில் துணிகர அரிவாள் வெட்டு

தேனி மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகத்தில் திட்ட அலுவலராக பணிபுரியும் ராஜராஜேஸ்வரி வயது 52 என்பவர் பணியாற்றி வருகிறார் 2015ம் ஆண்டு உமாசங்கர் 56 என்பவர் அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார்.


அலுவல் பணி கோப்புகள் மறுசீரமைப்பு போன்ற வேலைகளில் தனது கை வண்ணத்தை காட்டிவந்த போடியை சேர்ந்த ஜூனியர் அசிஸ்டென்ட் உமாசங்கர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வண்ணம் 70b விதிமுறையின் கீழ் அலுவல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளார், மேலும் இடம் மாறுதலாக ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் மகளிர்  மேம்பாட்டு திட்டத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக தூக்கியடிக்கப்பட்ட உமாசங்கர் ஜூனியர் அசிஸ்டன்ட் கருவ எண்ணத்தோடு ராஜராஜேஸ்வரியை பழிவாங்கும் எண்ணத்தோடு ஐந்தாண்டு காலம் காத்திருந்து இன்று மதியம் ஒரு மணி அளவில் ராஜராஜேஸ்வரி  அலுவலகத்தில் அவருடன் வந்த உமாசங்கர் தலை மற்றும் கை தோள்பட்டை போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டார்.


தகவல் அறிந்ததும் மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் ஆஜராகி விசாரணை செய்து குற்றவாளியை கைது செய்து தேனி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad