உடனடியாக தேனி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தீ விபத்து காரணமாக இப்பகுதி முழுவதும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குடோனில் வேலைக்கு வந்து இருந்த கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இரவு நேரம் என்பதால் பணியாட்கள் யாரும் அங்கு இல்லாத காரணத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது வரை தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர். முற்றிலும் தீ அணைக்கப்பட்ட பின்பு சேதத்தின் மதிப்பு குறித்து அளவீடு செய்யப்படும் தீ விபத்தின் காரணம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள பெரிய குடோன் தீ விபத்து காரணமாக எரிந்ததால் இப்பகுதி முழுவதும் புகை மூட்டம் காணப்பட்டது இப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பும் நிலவியது
No comments:
Post a Comment