தேனி மாவட்டம், பெரிய குளம் நகராட்சி வடுகபட்டி சாலையில் ஜெயராஜ் அன்ன பாக்கியம் மகப்பேறு மைய வளாகத்தில், தேசிய நகர்ப்புற நல்வாழ்வு குழும திட்டம் 2021- 2022 ன் கீழ், ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வெளிநோயாளிகளுக்கான கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்டும் பணிக் கான ஒப்பந்தம் விடப்பட்டது. ஒப்பந் தாரர் கிளாஸ் 1 கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் சார்பில் செல்வன், இந்தப் பணிக்கான ஒப்பந்தம் பெற்றுள்ளார். இதனையடுத்து, கட்டுமானப் பணிக் கான பூமி பூஜை, பெரிய குளம் நகர் மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன், சண்முக வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, சேகர், உதவிப் பொறியாளர் முருகன், கவுன்சிலர்கள் அதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம், நகர் மன்ற துணைத் தலைவர் பிரேம் குமார், சுதா நாகலிங்கம், மதன் குமார், கிஷோர் பானு, நாகபாண்டி மகேந்திரன், குருசாமி, ரூபினி ஜான், ஆபிதா பேகம், சந்தானலட்சுமி, பாபி என்ற வெங்கிடுசாமி, பிரியங்கா ராஜ்குமார், முகமது அலி, பாண்டியராஜன், மஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு ஒப்பந்ததாரர் செல்வன் பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினார்.
No comments:
Post a Comment