தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 May 2022

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

தேனி மதுரை சாலையில் உள்ள பங்களாமேடு திடலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் பேயதேவன் தலைமையில் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர்கள் நாகராஜன் தமிழ் பரமன் மாவட்ட இணைச் செயலாளர்கள் முத்துமணி அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட துணைத்தலைவர் வரவேற்றுப் பேச மாவட்ட செயலாளர் சாதியின் கோரிக்கை உரை நிகழ்த்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் புதிய கல்வி திட்டத்தை ரத்து செய்ய கோரியும் தொழிலாளர் நல உரிமையை பறிக்க கூடாது என்று வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad