பெரியகுளம் நகராட்சி பகுதியில் இயங்கி வந்த அம்மா உணவகத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து - அஇஅதிமுக நகர்கழக செயலாளர் N.V. ராதா தலைமையில், நகர்மன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம் முன்னிலையில் அதிமுக நகர கழக வார்டுகழக நிர்வாகிகள் தொண்டர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அம்மா உணவகத்தில் புதிதாக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் படம் வைப்பது, பழுதாகி உள்ள தண்ணீர் மோட்டாரை சீரமைப்பது, வயரிங் வேலைகள் புதிதாக மின் விளக்குகள், மின்விசிறிகள், Ro வாட்டர் சர்வீஸ் செய்வது, அம்மா உணவகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பள பணத்தை பெற்றுத் தருவது, பழுதடைந்துள்ள பாத்திரங்கள் கிரைண்டர் மற்றும் குழாய்களை சீரமைப்பது, மேலும் அம்மா உணவகத்தை சுற்றி திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருவதை உடனடியாக தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும் என அதிமுக நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இது சம்பந்தமாக பெரியகுளம் நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தது அடிப்படையில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment