9.70லட்சம் மதிப்பீட்டில் நீர் தேக்கத்தொட்டியை திறந்து வைத்தார் தேனி MP. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 6 May 2022

9.70லட்சம் மதிப்பீட்டில் நீர் தேக்கத்தொட்டியை திறந்து வைத்தார் தேனி MP.

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.ப ரவீந்திரநாத் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9.70லட்சம் மதிப்பீட்டில் குள்ளப்புரம் ஊராட்சி பகுதியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பொது மக்கள் பயன்பாட்டிற்காக அமைந்துள்ள நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்தார். 


இவ்விழாவில் தேனி மாவட்ட கழக செயலாளர் சையதுகான், அமைப்புச் செயலாளர் ஜக்கையன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரித்தா நடேசன், பெரியகுளம் ஒன்றியசெயலாளர் செல்லமுத்து, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ராஜபாண்டியன் பெரியகுளம் கிழக்கு ஒன்றியசெயலாளர் S.V.சேகர், குள்ளப்புரம் ஊராட்சி மன்றத்தலைவர் மஞ்சுளாதேவி, கிழக்கு ஒன்றி அவைத்தலைவர் அன்னகொடி, ஒன்றிய கவுன்சிலர் ரத்தினம்ராசு, அஇஅதிமுக ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதிகள் ஆண்டி, சுப்பிரமணி, பிச்சைமணி, தேவதானப்பட்டி பேருராட்சிசெயலாளர் முத்துராஜ்,  கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர்  ராஜமுகமது, கிழக்கு ஒன்றிய அஇஅதிமுக மீனவரணி செயலாளர்  முருகேந்திரன், கிழக்கு ஒன்றிய அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்சூரியா, கிளைச்செயலாளர் ரஞ்சித்குமார், மற்றும்  மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி கிளை கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள்  தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad