முன்னதாக தோட்டக்கலை மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மண் பரிசோதனை நிலையம் சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி ஊராட்சி ஒன்றிய தலைவர் சக்கரவர்த்தி பார்வையிட்டார், ஊராட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பேசியதவது,
மாணவர்களுக்கு வீட்டில் தான் பெற்றோர். பள்ளிக்கு வந்து விட்டால் ஆசிரியர் தான் பெற்றோர். வலைதளங்களில் பரவும் மாணவர்களின் செயல்பாடுகள் காணும்போது வருத்தமாக இருக்கிறது.
எனவே தேனி மாவட்ட பள்ளிகளில் தினமும் 5 நிமிடம் மாணவர்களுக்கு நீதிக் கதைகள் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். கப்பலோட்டிய தமிழன் விவேகானந்தர் போன்றோரின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்.
போராட்டம் தான் வாழ்க்கை. போராடாமல் வாழ்க்கை கிடையாது. போராட்டமும் வாழ்க்கையில் எப்போதுமே இணைந்தது தான். மாணவர்களுக்கு இனி வருங்காலங்களில்தான் கடுமையான காலகட்டம். சோதனையான காலகட்டம் என்பதை புரிய வையுங்கள்.
மிகச் சிறந்த பேச்சாளர்கள் பலர் நமது நாட்டைப் பற்றி மட்டும் அல்லாது மேற்கத்திய கிழக்காசிய தலைவர்களை பற்றியும் அவர்கள் போராட்டக் களத்தைப் பற்றியும் பேசுவதை பார்த்திருப்பீர்கள். அவையெல்லாம் தெண்டு என்றால் உற்சாக படுத்துவதற்கு மட்டுமல்ல ஊக்கப்படுத்துதல் வெளிப்படுத்துவதற்கும் தான். அதுபோல மாணவர்களுக்கு நீதி போதனைகளை நல்வழிப்படுத்தும் கதைகளை சொல்ல வேண்டும்.
உலகம் சிறியது. கையில் இருக்கும் மொபைல் போனில் அடங்கிவிட்டது என்று சொல்வார்கள். உலகம் மிக மிக மிகப் பெரியது. எனவே குழந்தைகளுக்கு அதை புரியவைத்து ஊக்கப்படுத்த வேண்டும், கிராமசபை கூட்டத்தில் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினர்.
No comments:
Post a Comment