TNPSC தேர்வுக்கு பேருந்து வசதி செய்ய கிராமசபை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரிடம் பட்டதாரிப் பெண்கள் கோரிக்கை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 1 May 2022

TNPSC தேர்வுக்கு பேருந்து வசதி செய்ய கிராமசபை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரிடம் பட்டதாரிப் பெண்கள் கோரிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அ.வாடிப்பட்டி ஊராட்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்  மற்றும் பெரியகுளம் ஊராட்சி குழுத்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்ற கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


இதில் கிராமத்தின் வளர்ச்சிக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தரக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர், மேலும் இந்த கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட படித்த பட்டதாரிப் பெண்கள் தமிழ்நாடு அரசு தேர்வான துறையால் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும், கடந்த காலங்களில் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்து உரிய பேருந்து வசதி இல்லாததால் போட்டித் தேர்வுகளை முறையாக சென்று எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அதனால் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் போட்டித் தேர்வுகளுக்கு போட்டித் தேர்வு நாளன்று உரிய நேரத்தில் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பங்கேற்க பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் இடம் கோரிக்கை வைத்தனர். 


இந்த கோரிக்கையை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் உரிய நடவடிக்கை எடுத்து போட்டித் தேர்வு நாளன்று தேர்வாளர்கள் உரிய நேரத்தில் தேர்வுக்கு செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தின் முடிவில் வாக்காளர்களுக்கான உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad