கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும்படி இருக்கும் தடுப்பணையில் ஆற்றின் தண்ணீர் தேங்கி வழிந்தோடுகிறது. இந்தநிலையில் நேற்று பள்ளிகள் விடுமுறை என்பதால் தடுப்பணையில் தேங்கியுள்ள நீரில் கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் அபாயகரமான முறையில் குளித்து வருகின்றனர். தடுப்பணையில் தேங்கியுள்ள நீரில் சில பகுதிகள் மிக ஆழமானதாக உள்ளது. அந்த பகுதிகளில் சிறுவர்கள் தெர்மாகோல் மற்றும் மரக்கட்டைகளை பயன்படுத்தி ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர்.
ஆபத்தான தடுப்பணையில் விபரீதம் நடைபெறுவதற்கு முன்பாக அந்த பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment