தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளுக்கு மருத்துவ மனையில் வழங்கப்படும் சிகிச்சை குறித்து பொது மக்களிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளுக்கு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை செவிலியர்கள் பற்றாக்குறை மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை இல்லாதது உள்ளிட்ட குறைபாடுகளை பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளையும் ஆய்வு மேற்கொண்ட பின்பு அங்கு உள்ள அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் மருத்துவமனை மேம்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கேட்டதோடு உயர் சிகிச்சைக்காக க. விளக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்புவதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது : நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை, எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை மையம், உள்ளிட்ட பற்றாக்குறைகளை தமிழக முதலமைச்சருக்கும், மருத்துவத் துறை அமைச்சருக்கும், தெரியப்படுத்தி பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் நோய்களை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment