கோத்தலூத்து ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் பழுதானதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 May 2022

கோத்தலூத்து ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் பழுதானதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் கோத்தலூத்து ஊராட்சியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் சுத்திகரிப்பு மையம் பழுது ஏற்பட்டு பல மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படாததால் பொது மக்கள் குடிநீருக்காக அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது .


கோத்த லூத்து ஊராட்சியில் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் சரியான மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது. குடிநீருக்காக தவித்து வந்த நிலையில் ,பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ரூபாய் 5 செலுத்தினால் ஒரு குடம் தண்ணீர் கிடைக்கும் அளவிற்கு இங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .இதனை பொதுமக்கள் மிகவும் பயனுள்ளதாக கருதி பயன்படுத்தி வந்தனர்.


 ஆனால் சில மாதங்களுக்கு முன்பு சுத்திகரிப்பு மையம் தொழில்நுட்ப காரணங்களால் பழுது ஏற்பட்டது. பழுதை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை பலமுறை தொடர்பு கொண்டும் அவர்கள் அதை சரி செய்ய முன்வரவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறியதாவது, இன்றைய கோடை வறட்சி காலத்தில் பொதுமக்கள் 20 லிட்டர் தண்ணீர் கேனை வெளியில் 35 முதல் 40 ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது, ஆனால் இந்த சுத்திகரிப்பு மையம் மூலம் அதே அளவு தண்ணீரை ரூபாய் 5 க்கு பெற்றுச் சென்றனர் .இது அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு சிறப்பானதாக இருந்தது .ஒரு வருட காலத்திற்கு பழுது ஏற்பட்டாலும் அதை சரி செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த ஒப்பந்த நிறுவனம் இதுவரையிலும் செவி சாய்க்காமல் இருப்பது வருந்தத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.


எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்ட இந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad