மேலும் அரசு சார்பில் வழங்கப்பட்ட அரிசி, கோதுமை, பாமாயில், சர்க்கரை, உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு வெளிச்சந்தையில் ஹோட்டல் கடைக்காரர்களிடமும்,ரைஸ் மில் உரிமையாளர்கள் இடமும் விற்பனை செய்துவிடுகின்றனர்.இதனால்பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டைக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாத சூழல்ஏற்பட்டுள்ளது.மேலும் கடைக்குச் சென்று பெண்கள் ஏன் பொருட்களை வழங்க வில்லை என்று கேட்டால் கடையில் இருக்கும் சிலர் அவர்களை ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசி மிரட்டிவருகின்றனர்.
அரசு சார்பில் ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் ஒருவர் விற்பனையாளராகவும், மற்றொருவர் எடையாளராகவும், இருக்க வேண்டும் எனவும்தேவை இல்லாத நபர்களை காவல்துறை மூலம் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும், ஒவ்வொரு நான்கு, ஐந்துபேர் இருந்து கொண்டு அரிசி பருப்பு கோதுமை உள்ளிட்ட பொருட்களை கூடுதல் விலைக்கு வாங்கிவந்து வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். அரசு வழங்கக்கூடிய துவரம் பருப்பு பாமாயில், சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் டீக்கடை களுக்கும் ஹோட்டல் கடைகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதனை விற்பனை செய்து கொடுப்பதற்கு என்றே பெரியகுளம் பகுதிகளில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.எனவேஉணவு வழங்கல் துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும், பெரியகுளம் பகுதிகளில் உள்ள அரசு நியாயவிலைக் கடைகளில் ஆய்வுசெய்து மாதமாதம் அரசு கிட்டங்கியில் இருந்து எடுத்து வரும் பொருட்கள் சரியாக இருக்கின்றனவா? அரசு உத்தரவை மதிக்காத கடை பணியாளர்கள் மீதும், கடைகளில் தேவை இல்லாத நபர்களை கண்டறிந்துகைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,அரசு வழங்க கூடிய பொருட்கள் உரிய முறையில் பொது மக்களுக்கு சென்றடைய வேண்டும் எனவும் பெரியகுளம் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment