தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாநில பொருளாளர் மு.முகமது யூசுப் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியையொட்டி டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார்.
ஒன்றியச் செயலாளர் ஆண்டி, நகரச் செயலாளர் ஜோதி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், சட்டமன்ற தொகுதி செயலாளர் தமிழ் பாண்டியன்,மாநில துணைச்செயலாளர் சிவனேசன், நகர்மன்ற துணைத் தலைவர் பிரேம்குமார், கவுன்சிலர்கள் பவானிமுருகன், கோமதி, நிர்வாகிகள் ஆண்டவர், தளபதி, மது,கருத்தையன், சேகுவேரா, சையது இப்ராகிம், ஜாபர்சேட், இனியன், தமிழ்செல்வன், திருமா சேகர், ராமகிருஷ்ணன், செல்லையா, செல்லமணி, பரமன், சக்திவேல், செந்தில், செல்வா, பாவலன், பிரபாகரன்உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
No comments:
Post a Comment