தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட தேனி சமதர்மபுரம் பகுதியில் காமராஜர் மருத்துவமனை திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த திறப்புவிழா நிகழ்ச்சியில் உறவின்முறை தலைவர் முருகன் தலைமை வகிக்க பொதுச் செயலாளர் ராஜ்மோகன் பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்த விழாவில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு காமராஜர் மருத்துவமனையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தேனி மாவட்டத்தில் நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் கல்வி சேவை குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் உறவின் முறை ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் அனைத்து நிறுவனங்களின் செயலாளர்கள் இணைச் செயலாளர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
No comments:
Post a Comment