தேனி மாவட்டம், பெரியகுளம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ப.ரவீந்திரநாத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2021-2022) ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்பீட்டில் 20 மீட்டர் உயரத்தில் உயர்மின் கோபுர விளக்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் ஆலோசனைப்படி நடைபெற்ற இவ்விழாவில் பெரியகுளம் நகர கழக செயலாளர் ராதா, துணை செயலாளர் அப்துல் சமது, பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினரும், அஇஅதிமுக பெரியகுளம் நகர் மன்ற குழு தலைவருமான ஓ.சண்முகசுந்தரம், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கு.நாராயணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜகோபால், பொன்.ரெங்கராஜ், காஜாமைதீன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அன்பு, ராஜாங்கம், முத்துப்பாண்டி, ஆசிக், பாண்டி, வழக்கறிஞர் தவமணி, அபுதாஹிர், ரெங்கராஜ் (சுகாதார ஆய்வாளர் (ஓய்வு), சரவணன், நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துலட்சுமி, குருசாமி, ராணி, சத்யா தண்டபாணி, சந்திரா ரவிக்குமார், உட்பட அஇஅதிமுகழக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment