இந்தத் திருவிழாவானது 28 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும் இந்த கோயில் திருவிழாவில் கடைசி ஒரு வார காலம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, தேனி மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது திருவிழாக்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த ஆலயத்தில் சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள முல்லைப் பெரியாற்றில் இருந்து அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை, நேர்த்திக்கடன்கள் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்துவது மிகவும் விசேஷமானது, இந்த ஆலயத்தில் உள்ள தேரும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் தற்போது திருவிழா தொடங்குவது காரணமாக தேர் புதிதாக வர்ணங்கள் பூசப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது.
அதனால்தான் இன்னும் அம்மை நோய் கண்டு குணமானவர்கள் கண்களில் கோளாறு உள்ளவர்கள் உடலில் கோளாறு உள்ளவர்கள் அரிசி மாவு வெல்லம் சுக்கு கலந்து மாவிளக்கு செய்து அதில் தீபம் ஏற்றி குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் கண்களிலிருந்து பாதம் முதல் தலைவரை வைத்து எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது இந்த தலத்தில் மிகவும் சிறப்புமிக்க ஒன்றாகும்.
மேலும் பக்தகோடிகள் குடும்பமாக வந்து ஓரிரு நாட்கள் இங்கேயே தங்கி சமையல் செய்து சாப்பிட்டு திருவிழாவில் பங்கேற்கபவர்களும் உண்டு, இவ்வாறு புகழ்பெற்ற இந்த ஆலயத்தின் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி பல லட்சக்கணக்கான மக்கள் கூடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இப்பகுதி வாழ் மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும் பொழுதுபோக்கு தலமாகவும் மட்டுமின்றி வெளியூரிலிருந்து வரும் மக்களின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் இது திகழ்ந்து வருவதால் இப்போதிருந்தே இப்பகுதியில் கடைகள் உணவு விடுதிகள் மற்றும் அனைத்து பொழுது போக்கு அம்சங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்து அறநிலைத் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மக்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்கான அனைத்து விளையாட்டுகளும் குறிப்பாக ராட்டினம் டோரா டோரா ரயில் வண்டி மினி சர்க்கஸ் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த முறை அதிக அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருவிழா நடைபெறவில்லை, இந்த முறை கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும் வருகிறது, அதற்கேற்ற ஆயத்தப் பணிகளும் கடைகள் அமைக்கும் பணிகளும் முழுமூச்சாக நடைபெற்று வருகிறது.
மேலும் பல திரைப்படங்களிலும் இந்தத் திருவிழா பற்றியும் இந்த கோயில் பற்றிய பாடல்களும் காட்சிகளும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment