பெரியகுளம் ஒன்றியத்தில் திட்ட இயக்குனர் ஆய்வு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 May 2022

பெரியகுளம் ஒன்றியத்தில் திட்ட இயக்குனர் ஆய்வு.

தேனி மாவட்டம், பெரியகுளம்  ஒன்றியம் ஜெயமங்கலம் ஊராட்சி, முதலக்கம்பட்டி ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் அரசு பள்ளிகள், சுற்றுச்சுவர், விரிவாக்கப்பணிகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், சாலைகள்அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் டாக்டர் இரா .தண்டபாணி ஆய்வு செய்தார். 

ஜல் ஜீவன்  மிஷன்  திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தனிநபர் குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் விநியோகம்  செய்ய வேண்டும். தேக்கமடைந்துள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று இந்த ஆய்வின் திட்ட இயக்குனர் இரா.தண்டபாணி தெரிவித்தார். 


பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சேகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்திக், செயற்பொறியாளர் பிரகதீஸ்வரன், உதவிப் பொறியாளர் சுபா, ஜெயமங்கலம்  ஊராட்சி மன்றத் தலைவர் அங்கம்மாள் சப்பாணி, முதல் ககம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பிரபா மருதுபாண்டியன், ஜெயமங்கலம் ஊராட்சி செயலர் கணபதி, முதலக்கம்பட்டி ஊராட்சி செயலர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர்  உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad