மேலும் அய்யனார்புரம் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு மடப்புரம் சீலக் காளியம்மன் , கருப்பசாமி, வீரசின் னம்மாள் , திருத்தளங்கள் அமைந்துள்ளன. மேலும் இந்த திருக்கோவில்களில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம் .மேலும் கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் தொற்று காரணமாக கோவில் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வருடம் மூன்று நாட்கள் சித்தரவதை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
முதன்முதலில் அக்கிராமத்தின் பெரிய வீட்டில் சுவாமி பெட்டிக்கு சிறப்பு தரிசனங்கள் நடைபெற்றன இரண்டாவது நாளில் அக்கிராமத்தின் சுவாமி வீட்டிலிருந்து சுவாமி பெட்டி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வைகை ஆற்றங்கரையில் உள்ள திருத்தலங்களுக்கு கொண்டுவரப்பட்டன மேலும் பக்தர்கள் பல நாட்கள் விரதம் இருந்து வைக்கப்பட்ட முளைப்பாரிகளை அனைவரும் சுவாமி வீட்டிலிருந்து திருத்தலத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்து சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர்.
பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனாக அருவா மேல் நின்று ஊர்வலமாக வருகை புரிந்து சுவாமி சன்னத்திற்கு அருவா மேல் நின்று கருப்பு சாமியின் அருள் பெறுவதற்காக சுவாமி ஆடியபடியே கோவில் திருத்தலம் வரை வருகை புரிந்துள்ளார் இந்த சிறப்பு திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.
No comments:
Post a Comment