இந்த மாபெரும் விழிப்புணர்வு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
தமிழக அரசு வேளாண் பெருங்குடி மக்களின் நலனை பாதுகாத்திடும் வகையில், வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஆண்டொன்றிற்கு இரண்டாயித்து 500 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண் வணிகம், ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை ஆகிய 13 துறைகளின் நலத் திட்டங்களை செயல்படுத்தி ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த தொகுப்புகளில் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள், விதை, நாற்றுகள் வழங்குதல், வேளாண்மை பொறியியல் துறை மூலமாக புதர்களை நீக்கி, நீர் பாசன வசதி ஏற்படுத்தி சாகுபடிக்கு கொண்டு வருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலமாக தொலைநோக்குத் திட்டத்தின் முக்கிய நோக்கமான நிகர சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் அலுவலர்கள் அடிப்படை புள்ளி விவரங்கள் சேகரிப்பு பணி மற்றும் தரிசு நிலங்களை கண்டறியும் பணியினை கூடிய விரைவில் நிறைவு செய்து பல்வேறு துறையினர் அந்த கிராமத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்ட இனங்கள் குறித்த விரிவான திட்ட கருத்துருவினை தயார் செய்து அளித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தி, மாவட்டத்திலுள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
எனவே, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இதுபோன்று கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் மாபெரும் விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் தங்களது பகுதிகளுக்கு அருகில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை விவசாயிகள் தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.
இந்த விழிப்புணர்வு முகாமில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரகவளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, கூட்டுறவுத்துறை, மீன்வளத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, விதைச் சான்றளிப்புத்துறை, உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சார்பில் இத்திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தார்பாலின் மற்றும் பண்ணைக் கருவிகள் கொண்ட தொகுப்பு மானியத்தில் திட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.
இம்முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆர்.தண்டபாணி, வேளாண்மை இணை இயக்குநர் தி.அழகுநாகேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், தோட்டக்கலை துணை இயக்குநர் பாண்டி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை துணை இயக்குநர் பால்ராஜ், வேளாண்மை துணை இயக்குநர் வி.எஸ்.சங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) பொ.தனலெட்சுமி, வேளாண். உர தர கட்டுபாட்டு அலுவலர் மணிகண்ட பிரசன்னா மற்றும் பிற துறை அலுவலர்க ள்,விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment