இதுகுறித்து வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்ரே நேரில் ஆய்வு செய்தார், சம்பவ இடத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் ஆய்வாளர் சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரி அம்மன் திருக்கோவில் திருவிழா நேற்று முதல் துவங்கி வருகின்ற 17 ஆம் தேதி முடிவடைகின்றது இந்த திருவிழாவிற்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றன இந்நிலையில் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டுள்ள ராட்டினத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி முத்துக்குமார் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
No comments:
Post a Comment