ஆண்டிபட்டி மேக்கிழார்பட்டி சாலையில் வனிதா ரவிக்குமார் தம்பதிகளால் உருவாக்கப்பட்ட மகிழ் வனம் அக்ரோ பார்ம்ஸ் மற்றும் மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடெமி சார்பில் தேனி மாவட்டத்திலேயே முதல் முறையாக நவீன ஸ்கேட்டிங் அரங்கத்தை கலசலிங்கம் கல்வி குழுமத்தின் ஆலோசகர் ஞானசேகர் சுவாமிநாதன் திறந்து வைத்தார். நவீன பலவகை விளையாட்டு பயிற்சி அரங்கத்தை திரைப்பட நடிகரும், மேனகா மில்ஸ் மேலாண்மை இயக்குனருமான லட்சுமண நாராயணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த அரங்கத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான கிரிக்கெட் பயிற்சி, ஸ்கேட்டிங் ,வில்வித்தை பயிற்சி, பவுலிங் எந்திரம் மூலம் பயிற்சி, கால்பந்தாட்ட பயிற்சி, குழந்தைகளுக்கான தடகள பயிற்சி, குத்துச்சண்டை, ஜிம், யோகா, சிலம்பம் கராத்தே பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுகளையும் ஒரே இடத்தில் பயிற்றுவிக்கும் வகையில் மிகவும் நவீன முறையில் அரங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை விளையாட்டு வீரர்களும் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த வேண்டும் என்று அரங்கத்தின் நிர்வாக இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment