இதையடுத்து விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் பயிற்றுனர்கள் வைகை வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் மதன் மோகன் மற்றும் சென்டெக் தொழில்நுட்ப வல்லுநர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ரசாயன உரங்களைத் தவிர்த்தல், இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தல், பாரம்பரிய விதை ரகங்களை பயிரிட்டு அதிக மகசூலும் பெறுதல், புதிய நெல் ரகங்கள், விதை நேர்த்தி, நவீன தொழில்நுட்ப முறை ஆகிய அம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்கள்.
இதுகுறித்த விழிப்புணர்வை கலைநிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இயற்கை விவசாயம் மேற்கொள்ள விவசாயிகளுக்கு தேவையான பாரம்பரிய ரகங்கள் மற்றும் இயற்கை உரங்கள் அந்தந்த விவசாயத் துறை வேளாண்மை விற்பனை மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களில் போடி, ஆண்டிபட்டி,சின்னமனுார் ஒன்றியங்களில் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . ஆண்டிபட்டி வேளாண் உதவி இயக்குனர் கண்ணன் நன்றி கூறினார். கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment