தேனியில் நடைபெற்ற "பிரதமரின் நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு" காணொலி நிகழ்ச்சி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 May 2022

தேனியில் நடைபெற்ற "பிரதமரின் நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு" காணொலி நிகழ்ச்சி.

தேனியில் நடைபெற்ற "பிரதமரின் நலிந்தோர் நல்வாழ்வு மாநாடு" காணொலி நிகழ்ச்சியில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பயன்பெற்ற ஏராளமானோர் கலந்து கொண்டு பிரதமர் திரு.நரேந்திர மோடியின் உரையை ஆர்வத்துடன் கேட்டனர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.முரளீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி திட்டம், விவசாயிகளுக்கான கௌரவ நிதி திட்டம் உள்ளிட்ட 13 துறைகளைச் சேர்ந்த மத்திய அரசின் திட்டங்களில் பயனடைந்த 150 பயனாளிகள் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் எட்டு ஆண்டு சாதனைகள் குறித்தும் மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு காணொலி காட்சி வாயிலாக திரையிட்டு காட்டப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர், மேலும் இதில் கலந்து கொண்ட பயனாளிகள் மத்திய அரசின் திட்டங்கள் தங்களின் வாழ்க்கைக்கு பெரிதும் உதவியாக உள்ளது என்றும் இதனை கொண்டு வந்த பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினர்.

No comments:

Post a Comment

Post Top Ad