அடுத்து கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், போடிவட்டத்தில் 488 ஏக்கர், தேனிவட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் என தேனிமாவட்டத்தில் 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது. முல்லை பெரியாற்று நீரை நம்பியிருக்கும் இவ்விளை நிலங்களுக்கு, ஆண்டு தோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் முதல்போகத்திற்கு ஜூன்மாதம் திறக்கவேண்டிய தண்ணீர் தாமதமாகவே திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மதங்களில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் 130.90 அடிவரை உயர்ந்ததால் ஜூன் மாதம் முதல் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டும் அணைநீர்மட்டம் மே மாதத்தில் 130 அடிக்கு குறையாமல் இருந்ததால், ஜூன் முதல் தேதியில் பெரியாறு அணையிலிருந்து முதல்போக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தேனிமாவட்ட முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்படுள்ள அரசு அணையில், தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கு 14707 ஏக்கர் நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 200 கன அடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 100 கன அடி வீதமும் மொத்தம் வினாடிக்கு 300 கன அடி வீதம், 01.06.2022 முதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிடுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழக விவசாயிகள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment