35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவற்றில் இரண்டு திருமணங்களை கவுன்சிலர்கள் மறுபரிசீலனை செய்யுமாறு கோரி அதன் அடிப்படையில் அந்த தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டன. இதனை அடுத்து, நிறைவாக 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர் கிஷோர் பானு நூர் முகமது : எங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் பழுதடைந்து கடந்த சில நாட்களாக எரியவில்லை. பொதுமக்கள் இருளில் தவித்து வருகின்றனர். இது குறித்து இந்த நகர்மன்றக் கூட்டத்தில் பல முறை தெரிவித்தும் , நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் நாகபாண்டி மகேந்திரன் : நகராட்சியில் விடப்படும் ஒப்பந்த பணிகள் தரமானதாக இருக்கின்றனவா என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் பெரும்பாலான பணிகள் தரமற்ற வகையில் அமைந்துள்ளன. ஒப்பந்த பணிகளை முறையாக செய்து முடிக்காத ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அவருக்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை தேவை என்றார்.
கவுன்சிலர் குமரன் : எங்களது வார்டில் தெருவிளக்குகள் எரியவில்லை. தெருவிளக்குகளை சீரமைத்து தரவில்லையென்றால், கண்டன தீர்மானம் நிறைவேற்றுவேன் என்று கூறினார்.
கவுன்சிலர் ஆபிதா பேகம் : எங்களது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் திருத்தியமைக்கப்பட்ட வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஏழை எளிய மக்களை உடனடியாக வரி செலுத்த வேண்டும் இல்லையென்றால் குடிநீர் இணைப்பை துண்டிப்போம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் . உரிய கால இடைவெளி கொடுத்து வரி வசூல் செய்ய வேண்டும். மேலும், வார்டு கவுன்சிலர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
12 ஆண்டுகால தேனி மாவட்ட மக்களின் கோரிக்கையான மதுரை-போடி நாயக்கனூர் அகல ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்றித் தந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடிஜி அவர்களுக்கும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் மாண்புமிகு ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ்ஜி, முன்னாள் முதல்வர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம், தொடர் முயற்சியால் தேனி மாவட்ட மக்களின் கனவை நனவாக்கிய தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து, அதிமுக நகர்மன்றத்தலைவர் ஓ.சண்முகசுந்தரம் பேசினார்.
No comments:
Post a Comment