ரூ.150கோடி அரசு நிலத்தை மீட்ட சார் ஆட்சியர் இடமாற்றம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 June 2022

ரூ.150கோடி அரசு நிலத்தை மீட்ட சார் ஆட்சியர் இடமாற்றம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் உள்ள அரசியல்வாதிகள் தனிநபர் அக்கறை அமைப்புக்கு உள்ளன 150 கோடி மதிப்புள்ள 216 ஏற்க அரசு புறம்போக்கு நிலங்களை மீட்ட பெரியகுளம் சப்-கலெக்டர் ரிசிப் மாற்றப்பட்டார்.


பெரியகுளம் சப்-கலெக்டர் ரிசிப் 2021ஜூலை 7 பொறுப்பேற்றார் அடுத்த சில மாதங்களில் வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் டிஜிட்டல் பதிவேடுகளை அதிகாரிகள் திருத்தி தனிநபர் பட்டா பதிவு செய்து கொடுத்து மோசடி செய்ததை அறிந்து அதில் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், முன்னாள் ஆர்டிஓ ஆனந்த், ஜெயப்பிரதா, சர்வேயர்கள் உட்பட15 பேர் மீது அரசியல்வாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சாமல் நடவடிக்கை எடுத்தார்.


அபகரித்தவர்கள் மீது மாவட்ட குற்றப் பிரிவில் புகார் அளித்தார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது, சர்வேயர் உதவியாளர் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட15 பெயர் கைது செய்யப்பட்டனர், துணை தாசில்தார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர், 150 கோடி சந்தை மதிப்புள்ள ஆக்கிரமிக்கப்பட்ட 216 ஏக்கரை அரசு நிலங்களாக பட்டா பதிவு செய்தார். இதற்காக ரிஷப் பை தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினார்.

மஞ்சளாறு அணை அருகே அரசுக்கு சொந்தமான 150 ஏக்கர் அரசு நிலங்களை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதை கண்டறிந்து விசாரணை துவங்கிய நிலையில் அரசியல் அழுத்தத்தால் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி சப் கலெக்டராக மாற்றப்பட்டார், இந்நிலையில் அரசு நில அபகரிப்பு நீர்த்துப் போகும் நிலை உருவாகும் இவரது காலத்தில் மணல் திருட்டு முழுமையாக கட்டுப்படுத்தபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad