ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் விளையாட்டு துறை மற்றும் யோகா கிளப் சார்பாக 8 வது சர்வ தேச யோகா தின கொண்டாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 June 2022

ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் விளையாட்டு துறை மற்றும் யோகா கிளப் சார்பாக 8 வது சர்வ தேச யோகா தின கொண்டாட்டம்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் விளையாட்டு துறை மற்றும் யோகா கிளப் சார்பாக 8 வது சர்வ தேச யோகா தின கொண்டாட்டம். 


நாடெங்கிலும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச  யோகா தின விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் பல்வேறு கல்வி நிலையங்களில் யோகா சம்பந்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த மூன்று மாத காலமாக நடைபெற்று வருகின்றன. 

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியின், உடற்கல்வி துறை சார்பாக  மாணவர்களுக்கு யோகா பயிற்சிகள் கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.  உடற்கல்வி இயக்குனர் டாக்டர் B. அக்பர் அலி அவர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். யோகா கிளப் சார்பாக மாநில அளவிலான பயிலரங்கம் 'யோகா ஃபார் ஹுமானிட்டி '(yoga for humanity) என்னும் தலைப்பில் நடைபெற்றது.  


கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி தர்வேஷ் முகைதீன், ஆட்சிமன்ற குழு தலைவர் ஜனாப். செந்தால் மீரான் இந்நிகழ்ச்சியில் தலைமை தாங்கினர். கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் ஹாஜி.  தர்வேஷ் முகைதீன் அவர்கள் தலைமை உரையில் இது போன்ற நிகழ்வு மாணவர்கள் மத்தியில் மத நல்லிணக்கத்தை வளர்க்கும் விதத்தில் இது போன்ற நிகழ்ச்சி ஒருங்கமைக்கப்படுகிறது என கூறினார். கல்லூரியின் முதல்வர் ஹாஜி. டாக்டர். முகமது மீரான் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.


இந்நிகழ்சியில் ஒய்வு பெற்ற முன்னாள் பேராசிரியர் அப்துல் சமது அவர்கள் யோகா பற்றி சிறப்புரை ஆற்றினார்.  இதில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் உடற்கல்வி துறை இயக்குநர் டாக்டர்.  அக்பர் அலி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றியதோடு மாணவர்களுக்கு மூச்சு பயிற்சியின் முக்கியத்துவத்தையும், யோகா பயிற்சியின் மூலம் கிடைக்கப் பெறும் நன்மைகள் எடுத்துரைத்ததேடு மட்டுமல்லாமல் பயிற்சி வகுப்பினையும் கற்பித்து பயிற்சி அளித்தார். 


மேலும் நிகழ்ச்சியின் முன்னதாக யோகா கிளப்  ஒருங்கிணைப்பாளர், ஆங்கிலத் துறை பேராசிரியர் திரு.  வேல்முருகன் வரவேற்றார்.  நிகழ்ச்சியின் இறுதியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

Post Top Ad