பெரியகுளத்தில் கலைஞரின் 99 வது பிறந்த நாள்விழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

பெரியகுளத்தில் கலைஞரின் 99 வது பிறந்த நாள்விழா.

தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 99ம் வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவபடத்திற்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.


தேனி அருகே பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில்,  மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணா நிதியின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

இந்த நிகழ்வில், 19 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பிரியங்கா ராஜ்குமார்,  நகர்மன்ற உறுப்பினர்கள் வைகை சரவணன், பாண்டியராஜன், நாக பாண்டி மகேந்திரன், கிஷோர் பானு நூர் முகமது, மஜித், பிரேம்குமார், சுதா நாகலிங்கம், வெங்கிடு சாமி,  அகமது அலி, ஆபிதா பேகம், மதன் குமார்,  நகராட்சி ஆணையாளர் புனிதன், நகராட்சி பொறியாளர் சண்முக வடிவு, ஆகியோர் கலந்து கொண்டனர்.   அதனைத் தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்தில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

தூய்மையை வழியுறுத்தும் விதமாக, பேரணி நடைபெற்றது. பெரியகுளம் சுதந்திர வீதி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள மன நல காப்பகத்தில் மன நோயாளிகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. 

No comments:

Post a Comment

Post Top Ad