தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை ஊராட்சி அழகர்சாமி புரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இஸ்மாயில் கனி என்பவரது மகன் சையது அலி 34, என்பவர் வழக்கறிஞர் எனக்கூறி போலியான அடையாள அட்டைகளுடன் பெரியகுளம் பகுதியில் வலம் வந்தவர் சையத் அலி. இவர் தடையை மீறி சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்வதற்காக 140 பாட்டில்களை இரு சக்கர வாகனத்தின் தேனியில் இருந்து மறைத்து கொண்டு வந்த போது பெரியகுளம் தென்கரை காவல்சார்பு ஆய்வாளர் மணிகண்டன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டார்.
அப்போது பையில் மறைத்து வைத்திருந்த மதுபாட்டில் விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சையது அலியை கைது செய்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து, பின்பு மதுபாட்டில் கடத்துவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் காவல்துறையினர் விசாரணையில் வழக்கறிஞர் எனக் கூறி போலியான அடையாள அட்டையுடன் பல்வேறு நீதிமன்றங்களுக்கு சென்று வழக்கறிஞராக காட்டிக் கொண்டும், வழக்கறிஞர் எனக் கூறி பொதுமக்களிடம் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment