பெரியகுளம் வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 June 2022

பெரியகுளம் வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம்- வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், கருவூல அலுவலகம், சார் ஆட்சியர் குடியிருப்பு, போக்குவரத்து காவல் நிலையம், நீதிமன்ற கட்டிடங்கள், பொதுப்பணித்துறை அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள், பொதுப்பணித்துறை பணியாளர்கள் குடியிருப்பு, அனைத்தும் கச்சேரி சாலையில் அருகருகே அமைந்துள்ளன. 


அன்றாட பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள் தங்களுடைய உடல் உபாதைகளை கழிப்பதற்காக கழிப்பறை வசதி இல்லாததால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.


இதனால் பல்வேறு வகையான தொற்று நோய்கள் ஏற்படுவதோடு பெண்கள் குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் பயனற்ற நிலையில் கிடைக்கும் பொது கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் அமரும் வகையில் நிழற்குடைகள் அமைக்க வேண்டும் எனவும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமெனவும், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றித் திரியும் இடைத்தரகர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad