மதுபானக்கடையை திறக்க எதிர்ப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 15 June 2022

மதுபானக்கடையை திறக்க எதிர்ப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் (திண்டுக்கல் தேனி தேசிய நெடுஞ்சாலையில்) சாலைமிகவும் போக்குவரத்து நெருக்கடியான சாலையாகும். இப்பகுதியில் தேவாலயங்கள் கோவில்கள், வணிக நிறுவனங்கள் பேருந்து நிறுத்தங்கள், ஆட்டோ நிலையங்கள் உள்ளதால் அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் போக்குவரத்திற்கு இடர்பாடான பகுதியாகும். இப்பகுதியில் தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலை உள்ளது.


போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் தனியார் நிறுவனத்தின் சார்பில் மதுபானக்கடையை புதிதாகத் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் எந்நேரமும் மக்கள் நடமாடும் பகுதியில் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் விரும்பத்தகாத பல்வேறு பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் எனவே போக்குவரத்து நெருக்கடியான சாலையில் மதுபான கடையை அமைக்க கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் நகர செயலாளர் ரமேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட கலால் அதிகாரி ஆகியோர்களுக்கு மனு அளிக்கப்பட்டது.


இந்நிலையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சாலை எனவும், தேவாலயங்கள் இந்து கோவில்கள் உள்ள பிரதான சாலை எனவும், தேசத்தந்தை காந்தியடிகளை அவமதிக்கும் வகையில் மதுபான கடையை அமைக்கக் கூடாது எனவும், மீறி அமைத்தார் கடையை இழுத்து மூடும் போராட்டம் நடத்தப்படும் என வாசங்கள் அச்சடித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளதால் பரபரப்பு. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கூறுகையில் பெரியகுளத்தில் வள்ளுவர் சிலை காந்தி சிலை புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்த அரசு மதுபானக்கடை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தியதும் அப்புறப்படுத்தப்பட்டது.


அதில் இருந்து இன்றுவரை பெரியகுளத்தில் எவ்வித பிரச்சனையும் ஏற்படவில்லை எனவும், பெரியகுளம் வைகை அணை சாலையில் உள்ள தனியார் மதுபான பாரால்பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்படுவதோடு சட்ட ஒழுங்கு பிரச்சனையும் அவ்வப்போது ஏற்பட்டு வருவதாகவும், ஆகவே அந்த தனியார் பாரையும் உடனடியாக மூட வேண்டுமெனவும், புதிதாக மூன்றாந்தல் பகுதியில் அமைய உள்ள மதுபான கடைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad