தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில்இருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 June 2022

தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில்இருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு.

மார்க்கையன்கோட்டை சேர்ந்த மணிகண்டன் மற்றும் கம்பத்தைச் சேர்ந்த பாலு இருவரும் போடி பகுதியில் மாடு பார்த்துவிட்டு பழைய பஜாஜ் m80 வாகனத்தில் கம்பம் நோக்கி பயணித்துள்ளனர். 


இராசிங்காபுரம் பாலத்தில் உள்ள வளைவில் கடக்க முயன்ற போது நிலைதடுமாறி எதிரே அதிவேகமாக போடி நோக்கி அதி வேகமாக வந்துகொண்டிருந்த தனியார் பேருந்தின் முன் பக்கத்தில் மோதி பேருந்தின் அடிப்பகுதியில் மாட்டிக் கொண்டனர்.

சுமார் 50 மீட்டர் பேருந்தின் அடி பக்கவாட்டில்  இழுத்துச் செல்லப்பட்ட இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad