இந்த திடீர் இணைப்பு குறித்து எம்.ஜி. ராஜா கூறுகையில், நான் கடந்த 1977 ம் ஆண்டு முதல் மாணவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். அதனைத் தொடர்ந்து, 1989 ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக பணிபுரிந்தேன். 1993 ம் ஆண்டு காங்கிரஸ் காரிய கமிட்டி மாவட்ட துணை தலைவராக இருந்தேன். காங்கிரஸ் கட்சியில் தனி மனித ஒழுக்கம், தொண்டர்களுக்கு மரியாதை இல்லை. தொண்டர்களை மதிக்கும் கட்சி பாஜக. தனி மனித ஒழுக்கம் நிறைந்தவர்களை கொண்ட கட்சி பாஜக தான். ஆகவே, மன நிறைவோடு பாஜக கட்சியில் இணைந்துள்ளேன் என்றார்.
உடன், மாவட்ட பொது செயலாளர் பாலு, வடக்கு ஒன்றிய தலைவர் சரவணக்குமார், பாஜக நகர தலைவர் முத்து பாண்டி, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment