தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தேசிய மாணவர்கள் படையினர் தூய்மைக்கான மக்கள் இயக்கம் உறுதிமொழி ஏற்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 June 2022

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தேசிய மாணவர்கள் படையினர் தூய்மைக்கான மக்கள் இயக்கம் உறுதிமொழி ஏற்பு.

பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில்  ஆணையாளர்  தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் தேசிய மாணவர்கள் படையினர் நகரங்களின்   தூய்மைக்கான மக்கள் இயக்கம் உறுதிமொழி ஏற்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆணையாளர் புனிதன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சேகர், அசன் முன்னிலையில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய  மாணவர்  படையினர்  நகரங்களில்  தூய்மைக்கான  மக்கள் இயக்கம்  சார்பில்  விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  


பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன் அவர்கள் உறுதிமொழியை வாசித்தார்.  மேலும் நகராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பை என தூய்மை  பணியாளர்களிடம் குப்பைகளை தரம்பிரித்து கொடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் 

No comments:

Post a Comment

Post Top Ad