உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமை முதன்மையாளர் விருதை வழங்கிய தேனி மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 6 June 2022

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமை முதன்மையாளர் விருதை வழங்கிய தேனி மாவட்ட ஆட்சியர்.

தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 பேருக்கு வழங்கி தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பு வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது . 


சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக தங்களது மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வுகளையும், மரங்களில் இருக்கும் ஆணிகளை பிடுங்கி பல்வேறு ஆணி பிடுங்கும் திருவிழா நடத்தியதிற்காகவும் தேனி மாவட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குளம் குட்டைகளில் பனைமரம் விதைகளை நடவு செய்து பனை திருவிழா நடத்தியதற்காகவும் பல்வேறு முக்கிய இடங்களில் தூய்மை பணிகளை  மேற்கொண்டதாற்க காவும் உத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் அவர்களுக்கு பசுமை சாம்பியன் விருதுக்கான ஒரு லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழையும், ஹாஜி கருத்த ராவுத்தா் ஹவுதியா கல்லூரிக்கி ஒரு லட்சம் காசோலை  சான்றிதழையும் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன்  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேனகா மில்ஸ்  தனியார் தொழிற்சாலையில் நடைபெற்ற இந்த விழாவில் விருதினை வழங்கி சிறப்பித்தார்.


மேலும் மேனகாமில் லிமிடெட் இயக்குனர் மணிவண்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தேனி மாவட்ட அலுவலர், துறை சார்ந்த அலுவலர்கள்  ஆகியோர் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார்கள். மேலும் இந்த விருது வழங்கும் விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அலுவலர்கள், பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad