அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்: பெரியகுளத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 June 2022

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்: பெரியகுளத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.


அஇஅதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்து வரும் சூழலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனமான டாக்டர்.எம்ஜிஆர் அவர்களின் கையொப்பமிட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.


அதில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அவர்களின் கழக சட்ட விதிப்படி தொண்டர்களே கட்சியின் தலைமையை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி முறைகளை தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி மாற்ற முயற்சிக்கும் தீய சக்திகளுக்கு எங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும், தொண்டர்களின் உரிமையைப் பறிக்கும் 23ஆம் தேதி சென்னையில் நடக்கும் போது குழுவிற்கு தமிழகம் முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் படை எடுப்போம் என்றும், தொண்டர்களே கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு செய்வார்கள் என்றும் அடங்கிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன, இதனால் அதிமுக நிர்வாகிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad