10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் மருத்துவர்களையும் - செவிலியர்களையும் இடம்மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 11 July 2022

10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் மருத்துவர்களையும் - செவிலியர்களையும் இடம்மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் மற்றும் கிராமபகுதி மக்களுக்கு இரவு-பகல் எனமருத்துவ சேவையினை அரசு தலைமை மருத்துவமனை தந்து கொண்டிருந்தது- 10 வருடங்களுக்கு முன்புவரைஅங்குள்ள மருத்துவர்களும்- செவிலியர்களும் சிறப்பான பணியை செய்துவந்தனர்.


ஆனால் கடந்த சில வருடங்களாக மருத்துவ பணியின் மகத்துவத்தை மறந்து மருத்துவத்துக்காக வரும் நோயாளிகளை தொட்டுக் கூட பார்க்காமல் மருந்துமாத்திரைகளை எழுதிக் கொடுப்பது வேதனையாக உள்ளது. மேலும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைபெயருக்குதான் தலைமை மருத்துவமனையாக உள்ளது ஆனால் பெரும்பாலான நோயாளிகளை தேனிஅரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவரும் நிலையே இருக்கிறது.


அதேசமயம் கடந்த 9 - 6 - 2022-ம் தேதி மாலை கல் அடைப்பு வலி ஏற்பட்டு பெரியகுளம் பகுதியை சேர்ந்த அதே மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் லதா என்பவர் மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு மருத்துவம் பார்க்காமல் பணி மருத்துவர் அஜாக்கிரதையாக இருந்துள்ளார்-இந்த சம்பவத்தை மறைக்க அவர்மீது புகார் கொடுத்து வழக்கும் பதிந்துள்ளார்கள்


அதேபோல் அதே மருத்துவமனையில் மணநலப் பிரிவில் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போடியை சேர்ந்த கண்ணன் என்பவர் பாதுகாப்பு நிறைந்த அந்த பிரிவில் 8 - 7 - 2022ம் தேதி மருத்துவமனைக்குள்ளயே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். 24 மணிநேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டிய அந்த பிரிவில் மருத்துவர்- செவிலியர்-மற்ற ஊழியர் என யாருமே பணியில் இல்லை. இப்படிப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுப்பதின் மூலமாக அந்த மருத்துவமனையை நம்பி வரும் ஏழை - எளிய மக்களின் நம்பிக்கையையும் மருத்துவ சேவையையும் உறுதிபடுத்த வேண்டும்.


அதேசமயம் அந்த மருத்துவமனையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் மருத்துவர் மற்றும் செவிலியர்களை பணிமாற்றம் செய்தால் மட்டுமே அந்த மருத்துவமனையில் மக்களுக்கான பணி சிறப்பாகவும்-கடமை உணர்வோடும் பணியாற்றுவார்கள் என்பதை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க கேட்டும் தேனி மாவட்ட சிவசேனா கட்சி நிர்வாகிகள் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் க.வி.முரளிதரன் அவர்களிடம் மனு அளித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad