குமணந்தொழுவில் அதிகாலை 5 மணிக்கு மது விற்பனை ஜோர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 July 2022

குமணந்தொழுவில் அதிகாலை 5 மணிக்கு மது விற்பனை ஜோர்.

தேனி மாவட்டம், கடமலை - மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட குமணந்தொழு கிராமத்தில் அரசு அனுமதி இல்லாமல் பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் அதிகாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மது விற்பனை ஜோராக நடக்கிறது. இதனால் அதிகாலையில் குடி மகன்கள் மது குடித்துவிட்டு குமணந்தொழு - கோம்பைத்தொழு செல்லும் மெயின் ரோட்டில் கலாட்டாவில் ஈடுபட்டும், சிலர்  பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். 


இது தொடர்பாக பொதுமக்கள் சார்பில் காவல்துறைக்கு  தகவல் கொடுத்தும்  நடவடிக்கை இல்லை, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:  குமணந்தொழு சுடுகாடு மயானத்தின் அருகே அரசு அனுமதி இல்லாமல் சிலர் தனி நபர்கள் பார்  நடத்தி வருகின்றனர்.


அதிகாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்கின்றனர். அதிகாலை யில் குடிமகன்கள் மது அருந்துவதால் கூலி வேலைக்கு செல்வதில்லை, இதனால் பெரும்பாலான குடும்பங்க ளில் தினந்தோறும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த அரசு அனுமதி  இல்லாமல் பார் நடத்தி வருபவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

3 comments:

Post Top Ad